உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில், டெல்டா கலை திருவிழா

Published On 2023-01-22 09:15 GMT   |   Update On 2023-01-22 09:15 GMT
  • 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஸ்கில் இந்தியன் டெல்டாகலை திருவிழா நடைபெற்றது. ஸ்கில் இந்தியன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் தலைமை வசித்தார். முதல்வர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோலப் போட்டி, நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செல்வராஜ் எம்.பி, நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

முடிவில் டெல்டா கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News