உள்ளூர் செய்திகள்

பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள், செடிகள் விற்பனை

Published On 2022-12-17 15:47 IST   |   Update On 2022-12-17 15:47:00 IST
  • இதை பயன்படுத்துவதால் பயிர்கள் மற்றும் செடிகளுக்கு நோய்கள் தாக்காது.
  • எதிர்கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கிருஷ்ணகிரி,

பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பேராசிரியர் பரசுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள், செடிகள் மற்றும் உயிர் உரங்கள் விற்பனைக்கு உள்ளது. நெல்விதை பையூர்-1 (ரூ.40-கிலோ), ராகி விதை பையூர்-2 (ரூ.52-கிலோ), முருங்கை விதை பிகேஎம்-1(ரூ.3000-கிலோ), காய்கறி தோட்டத்திற்கு தேவையான காய்கறி விதைகள் பாகற்காய் (கோ1), புடலை (பாலூர் 1 மற்றும் பாலூர் 2), மற்றும் பீர்க்கங்காய் (பிகேஎம்1), மா ஒட்டு செடிகள் அனைத்து ரகங்களும் (ரூ.40-செடி) கிடைக்கும்.

காய்கறி தோட்டத்திற்கு தேவையான ஒட்டு கத்திரி செடிகள் விவசாயிகள் விரும்பிய ரகங்களுக்கு ஒட்டுகட்டி (ரூ.8-செடி) தரமான ஒட்டு நாற்றுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான அழகு தாவரங்கள், மூலிகை செடிகள் மற்றும் பழ வகை செடிகளான ஒட்டு செடிகள் (மாதுளை, நெல்லி மற்றும் கொய்யா) இங்கு கிடைக்கும்.

மேலும், உயிர் எதிர்கொல்லிகளான பேசில்லஸ் சப்டிலிஸ் (ரூ.168-கிலோ) மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி (ரூ.168-கிலோ) கிடைக்கும். இதை பயன்படுத்துவதால் பயிர்கள் மற்றும் செடிகளுக்கு நோய்கள் தாக்காது. மேலும், இயற்கை உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (ரூ.60-கிலோ), பாஸ்போபாக்டீரியா (ரூ.60-கிலோ), ரைசோபியம் (ரூ.60-கிலோ), வேம் (ரூ.60-கிலோ), தென்னை டானிக் (ரூ.325-லிட்டர்), மண்புழு உரம் (ரூ.10-கிலோ), மற்றும் விவசாயிகள் மண்புழு உரம் தயாரிப்பதற்கு தேவயை£ன மண்புழு (ரூ.375-கிலோ) கிடைக்கும்.

மேற்கூறிய விதைகள், செடிகள், உயிர் உரங்கள் மற்றும் உயிர் எதிர்கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News