உள்ளூர் செய்திகள்

நாகையில், விமான நிலையம் அமைக்க வேண்டும்

Published On 2022-12-11 14:53 IST   |   Update On 2022-12-11 14:53:00 IST
  • வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளது.
  • கோடியக்கரை சரணாலயம் உள்பட பல்வேறு சுற்றுலா தலம் நிறைந்த மாவட்டமாக நாகை விளங்குகிறது.

வேதாரண்யம்:

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் கிழக்கு எல்லையான நாகையில் புவியியல் அடிப்படையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என நாகை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது :-

நாகை மாவட்டம், ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்களும், கோடியக்கரை சரணாலயம், உள்பட பல்வேறு சுற்றுலா தலமும் நிறைந்த மாவட்டமாக நாகை மாவட்டம் விளங்குகிறது.

இதுதவிர நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. மேலும் மீனவர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. மீன் ஏற்றுமதி, உப்பு ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.

கடற்கரை நகரங்களின் மத்திய பகுதியில் நாகப்–பட்டினம் அமைந்துள்ளது. எனவே எல்லை பாது–காப்பை கணக்கில் கொண்டு விமான நிலையம் அமைத்தால் அது நாட்டிற்கே அரணாக விளங்கும் விமானப்படைக்கு ஏதுவாக இருக்கும்.

நாகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதி என்பதால் மீட்பு பணிகளுக்கு ராணுவம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துவர வழி வகுக்கும்.

கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகள், அறந்தாங்கி வரை உள்ள மக்கள் திருச்சி விமான நிலையம் செல்வதைவிட நாகையில் விமான நிலையம் அமைந்தால் வந்து செல்வது எளிது.

எனவே "நாகையில் விமான நிலையம் அமைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News