உள்ளூர் செய்திகள்

மத்தூர் பேருந்து நிலையத்தில் வாழைத்தார்களுக்கு உடனடியாக பழுக்க ரசாயானம் தெளிக்கும் பழக்கடையின் பணியாளர்.

மத்தூர் பேருந்து நிலையத்தில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்படும் வாழை பழங்கள்

Published On 2022-12-02 09:49 GMT   |   Update On 2022-12-02 09:49 GMT
  • பலரக பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மொத்த மாகவும், சில்லரை யாகவும் விற்பனை நடைபெறுகிறது.
  • ரசாயன ஸ்பிரே அடித்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலை யத்தில் ஏராளமான பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

இங்கு நேரடியாக திருப்பத்தூரில் இருந்து பலரக பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மொத்த மாகவும், சில்லரை யாகவும் விற்பனை நடைபெறுகிறது.

இதனால் இங்கு சுற்றுவட்டாரங்களை சேர்ந்த வியாபாரிகள் பெருமளவு இங்கு பழங்களை வாங்கி செல்வது வழக்கம். இதனால் இங்கு பெரும் வர்த்தகமே வர்த்தகம் நடைபெறுகிறது. இந்நிலையில் இங்கு அதிகமாக வாழைப்பழத்தார் விற்பனைக்கு அனுப்பி வைப்பதால் நாள்தோறும் சுமார் 100 டன் வாழைப்பழத்தார் விற்பனை நடைபெறுகிறது.

மத்தூர் பேருந்து நிலையத்தில் வாழை த்தார்களை பழுக்க வைக்க திறந்த வெளியில் ரசாயன ஸ்பிரே அடிக்கும் ஊழியரின் செயல் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கைக்கு மாறாக வாழைத்தார்களை பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே அடித்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

இந்த பழங்களை உண்பதால் மனிதர்களுக்கு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன.

மேலும் பழங்களை பழுக்க வைக்க 'எத்தனால்' என்ற வேதிப்பொருளை பயன்படுத்துவது மத்தூர் போச்சம்பள்ளி பகுதியில் தொடர் கதையாக உள்ளது.

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோல் செயல்களில் ஈடுபவர்கள் மீது உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் வெங்கடேசன் அவர்களிடம் கேட்ட பொழுது ஸ்பிரே மூலம் ரசாயனம் கலந்து மருந்து தெளிப்பது மிகப்பெரிய தவறு. இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Tags:    

Similar News