உள்ளூர் செய்திகள்

புதிய தேரின் வெள்ளோட்டம் நடந்தது.

கும்பகோணத்தில், புதிய தேர் வெள்ளோட்டம்

Published On 2023-02-24 09:27 GMT   |   Update On 2023-02-24 09:27 GMT
  • தேர் சுமார் 250 டன் எடையில், 26 அடி உயரத்தில், 16 அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மாசி மக தேரோட்டம் வருகிற 4-ம் தேதி நடைபெறுகிறது.

கும்பகோணம்:

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வர சாமி கோவிலில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தேரின் அனைத்து பகுதிகளும் சிதிலமடைந்து, சிற்பங்கள் பழுதாகி திருத்தேரோட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து பக்தர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத் துறையினர், கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் வடிவமைக்க முடிவெடுக்கப்பட்டுக் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த தேர் சுமார் 250 டன் எடையில், 26 அடி உயரத்தில், 16 அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் மாசி மகத் திருவிழாவின் போது தேரோட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 25-ம் தேதி மாசி மக கொடியேற்றம் தொடங்கி முக்கிய நிகழ்ச்சி என தேரோட்டம் வருகிற 4-ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தை அன்பழகன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

Tags:    

Similar News