காவேரிப்பட்டினம் பேருந்து நிலையத்தில் பேருந்து நடைமேடையில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தி உள்ளதை படத்தில் காணலாம்.
காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவதால் பயணிகள் அவதி
- பேருந்து நடைமேடை அருகே இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தி விடுகின்றனர்.
- நடைமேடையில் பேருந்துகளை நிறுத்தினால் எங்களுக்கு பேருந்துகளுக்குள் ஏறுவதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என கூறுகின்றனர்.
காவேரிப்பட்டினம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றிலும் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி, பெங்களூர் போன்ற ஊர்களுக்கு செல்ல காவேரிப்பட்டணம் பேருந்து பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டி உள்ளது.
அப்படி செல்பவர்கள் மீண்டும் தங்களது கிராமத்திற்கு செல்ல காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திற்கு வந்து அரசு டவுன் பஸ்சில் செல்ல வேண்டும். அரசு டவுன் பஸ் வருவதற்கு நேரம் ஆவதால் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்து காத்திருக்கின்றனர் .
அப்பொழுது வணிக வளாகத்திற்கு உள் நுழைய முடியாதவாறு பேருந்து நடைமேடை அருகே இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தி விடுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு டவுன் பஸ் வரும்பொழுது பயணிகள் முண்டியடித்துக் கொண்டு அரசு டவுன் பஸ்சில் ஏறும் பொழுது பல சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக தாய்மார்கள், கர்ப்பிணிகள் டவுன் பஸ்சில் ஏற முடியாத சூழ்நிலை உருவாகிறது.
இது குறித்து பயணிகள் கூறும் பொழுது நாங்கள் வெளியூருக்கு சென்று திரும்பும் போது எங்கள் கிராமத்திற்கு செல்ல காவேரிப்பட்டினத்திற்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. அப்பொழுது காவேரிப்பட்டணம் வணிக வளாகத்திற்கு அருகே உள்ள பேருந்து நடைமேடை அருகே ஏராளமானோர் இது சக்கர வாகனங்களை நிறுத்துவதால் எங்களால் பேருந்துக்குள் ஏற முடியவில்லை.
காவேரிப்பட்டணம் பேருந்து நடைமேடையில் பேருந்துகளை நிறுத்தினால் எங்களுக்கு பேருந்துகளுக்குள் ஏறுவதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என கூறுகின்றனர்.
இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள பேருந்து நடைமேடையில் அருகில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பேருந்து நடைமேடையில் பேருந்து முறையாக நிறுத்தி எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.