உள்ளூர் செய்திகள்
பெண் பக்தர்கள் கைகளில் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்ற காட்சி.
ஓசூர் தேர்பேட்டையில், ஓம் சக்தி கோவில் விழாவில் பெண்கள் தீச்சட்டி ஏந்தியவாறு ஊர்வலம்
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.
- ஓம் சக்தி தேரை, பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள ஓம் சக்தி கோவிலில் 30-ஆம் ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.
மேலும், பெண் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கைகளில் தீச்சட்டி ஏந்தியும், கஞ்சி கலசங்களை எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக சென்றனர். பின்னர், ஓம் சக்தி தேரை, பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
தேர் பேட்டையில் நான்கு வீதிகளின் வழியாக சென்ற தீச்சட்டி ஊர்வலம், ஓம் சக்தி கோவிலில் நிறைவடைந்தது.இதில் ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்