உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Published On 2022-08-13 10:02 GMT   |   Update On 2022-08-13 10:02 GMT
  • பெண் குழந்தைகள் பாதுகாப்பாக கவனமாக சாலைகளில் செல்ல வேண்டும்.
  • இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

 பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக கவனமாக சாலைகளில் செல்ல வேண்டும். இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளி செல்லும் பொழுது யாராவது கிண்டல் செய்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பெண்கள் படித்து நல்ல ஒழுக்கத்தை கற்று பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பெண்குழந்தைகள் கடந்த காலத்தில் அதிக அளவில் வெளியே வர மாட்டார்கள். வெளியூரில் தங்கி படிக்க வைக்க மாட்டார்கள்.

ஏனேன்றால் பெற்றோர்களுக்கு பயம் இருந்தது. தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் நிறைய துறையில் சாதித்து வருகின்றனர். பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு சுதந்திரம் அளித்து படிக்க வைக்கின்றனர்.

யாராவது உங்களை தவறான முறையில் தொட்டாலோ, பேசினாலோ போலீசாருக்கு தைரியமாக தகவல் அளியுங்கள் என பல்வேறு அறிவுரைகளை பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கமுதல் நிலை போலீசார் பேபி மற்றும் நதியா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News