உள்ளூர் செய்திகள்

அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் 2 ஆயிரம் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம் வந்த காட்சி.

அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் 2 ஆயிரம் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம்

Published On 2022-08-04 15:36 IST   |   Update On 2022-08-04 15:36:00 IST
  • கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த கோவில் திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றது.
  • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி கரகங்கள் தலை கூடும் நிகழ்ச்சியின் போது, 2 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரி யம்மன் கோவில் திரு விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றது.

அதன்படி 169வது ஆண்டு மாரியம்மன் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி 7 நாட்கள் நடந்தது. ஏழாவது நாளான நேற்று காலை 10 மணிக்கு, அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்தூர், பெரியமுத்தூர், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

நெக்குந்தியில் இருந்து முத்துமாரியம்மன் கரகமும், அவதானப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளியம்மன், நாகதேவி பொன்கரகமும், மற்றும் அவதானப்பட்டி மேம்பாலம் அருகில் தலை கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்று அம்மனுக்கு படைத்தனர். பின்னர் கோயில் பின்புறம் 500க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். அவ்வாறு பலியிடப்பட்ட ஆடு மற்றும் கோழிகளை சமைத்து, தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளித்தனர். இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராள மான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News