உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 

அரூர் சித்தேரி மலைவாழ் மக்களுக்கு உறுப்பினர் கல்வி திட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்

Published On 2022-07-09 15:10 IST   |   Update On 2022-07-09 15:10:00 IST
  • கடன் பெற்ற தொகையை தவணை தேதியில் செலுத்தி வட்டி சலுகை பெற்று பயனடையுமாறு தெரிவித்தார்.
  • இச்சங்கத்தில் அனைவரும் உறுப்பினர்களாக சேர்ந்து பங்குத்தொகை ரூ.100- மற்றும் பிரவேசக் கட்டணம் ரூ.10- அரசே செலுத்துகிறது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சித்தேரி பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் மலைவாழ் மக்கள் பொருளாதார முன்னேற்றம் விளக்க கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் சந்தானம் தலைமை தாங்கினார்.

சென்னை நடேசன் கூட்டுறவு பயிற்சி நிலைய துணை இயக்குநர் கணேசன் உறுப்பினர் கல்வி திட்ட முகாமை நடத்தினார். தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் கூறுகையில், பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் சித்தேரி, நலமாங்கடை, பேரோரிபுதூர் ஆகிய கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து கூட்டுறவுத் துறையின் மூலம் மலைவாழ் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பெற்று பயனடையுமாறு தெரிவித்தார்.

மேலும் பயிர்கடன், விவசாய நகைகாசுக் கடன் போன்ற வைகளுக்கு தவணைத் தேதியில் திருப்பி செலுத்தினால் அறவே வட்டி இல்லை.

கடன் பெற்ற தொகையை தவணை தேதியில் செலுத்தி வட்டி சலுகை பெற்று பயனடையுமாறு தெரிவித்தார். சுயஉதவி குழுக்கள் அமைத்து சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து குழுக்கடன்கள் பெற்று பயனடையுமாறு தெரிவித்தார்.

மேலும் இச்சங்கத்தில் அனைவரும் உறுப்பினர்களாக சேர்ந்து பங்குத்தொகை ரூ.100- மற்றும் பிரவேசக் கட்டணம் ரூ.10- அரசே செலுத்துகிறது. இச்சங்கத்தில் கால்நடைகளுக்கு ரூ.14 ஆயிரம் பராமரிப்பு செலவிற்காக கடன் வழங்கப்படுகிறது.

இக்கடனை தவணை தேதியில் திருப்பி செலுத்தினால் புதிய கால்நடைகள் வாங்க ரூ.45 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.

கடன் பெற்றவர்கள் வாய்தா தேதியில் கடனை திருப்பி செலுத்தி புதிய கடனை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார். இந்த உறுப்பினர் கல்வி திட்ட முகாமில் சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிறுவன துணை இயக்குநர் கணேசன் கூறுகையில் (1) கூட்டுறவு இயக்கம் மற்றும் கூட்டுறவு கொள்கைகள், பண்புகள், அங்கத்தினரின் தகுதிகள், கடமைகள் (2) கிராம வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு கூட்டுறவின் பங்கு (3) மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

பயிற்சி முகாமில் தருமபுரி மண்டல இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் மலைவாழ் மக்களுக்கு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கினார். மேலும் கால்நடை பராமரிப்பு செலவிற்கான விண்ணப்பம் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் பழனி, செயலாளர், தலைவர், இயக்குநர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News