உள்ளூர் செய்திகள்

கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்ற சிறுவன் ஒருவனுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி


உடன்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலை நிகழ்ச்சி

Published On 2022-12-09 13:51 IST   |   Update On 2022-12-09 13:51:00 IST
  • உடன்குடி வட்டார வளமையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  • வட்டார ஆளவில் 6 பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உடன்குடி:

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உடன்குடி வட்டார வளமையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உடன்குடி யூனியன் துணைத்தலைவர் மீரா சிராஜூதீன் தலைமை தாங்கினார். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடன்குடி வட்டார ஆளவில் 6 பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், உதவித்தொகை, வேலைவாய்ப்புகள் குறித்து பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ் பேசினார்.

சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை சிறப்பாக பாடிய இரு மாணவிகளுக்கு உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம், தி.மு.க. ஓன்றிய பொருளாளர் ஷேக் முகம்மது, நகர பொருளாளர் திரவியம், நிர்வாகிகள் ஹீபர், கணேசன், சக்கரவர்த்தி, அன்வர்சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News