வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்
- அரியலூர், ஜெயங்கொண்டத்தில்வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்
- வாக்காளர் பட்டியல் வரும் 27-ந்தேதி வெளியிடப்பட உள்ளது
அரியலூர்,
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 1.1.2024 ஆம் நாளை தகுதி நாளாக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் பொருட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைத் திருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கு விண்ணப்பிக்க அனைத்து வாக்குச் சாவடி மையங்க ளிலும் சிறப்பு முகாம் நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை புதிதாக சேர்க்க படிவம் 6ம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ள வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர பிழைகளை திருத்தம் செய்ய படிவம் 8 ஐயும், அந்தந்த வாக்கு ச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு ச்சாவடி நிலை அலுவலர்க ளிடம் பெற்று, பூர்த்தி செய்து அளித்து பயன்பெற லாம் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.