உள்ளூர் செய்திகள்

தொடர் குற்றம் செய்து வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-10-22 11:55 IST   |   Update On 2023-10-22 11:55:00 IST
தொடர் குற்றம் செய்து வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர், 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்பாண்டியன்(42). அரியலூர் அடுத்த வாரணவாசி சமத்துவபுரத்தில் வசித்து வரும், இவர் மீது தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, அரியலூர் காவல் துறையினர் கைது செய்து, அரியலூர் கிளை சிறையில் அருண் பாண்டியனை அடைத்தனர்.

இந்நிலையில் அவர் வெளியில் வந்தால், தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதால், போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அருண்பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News