உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் போராட்டம்

Published On 2023-02-21 15:14 IST   |   Update On 2023-02-21 15:17:00 IST
  • கட்டடங்களை இடிப்பதற்கான ஆணையை ரத்து செய்யக் கோரி
  • கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் அடுத்த கோக்குடி கிராம மக்கள் சார்பாக கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்து செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோக்குடி கிராம வளர்ச்சிக்கு, அப்பகுதி மக்கள் பொது இடங்களில் நான்கு கட்டடங்களை கட்டி, அதனை வாடகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல் பள்ளி, கல்லறை தோட்டம், குடிநீர் விநியோகம், கிணறு வெட்டுதல், சாலை அமைப்பது, பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்கின்றனர்.இந்நிலையில், பொது இடத்தில் இருக்கும் அந்த கட்டடத்தை இடிப்பற்கு மாவட்ட நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோக்குடி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து, அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News