உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-03 10:55 IST   |   Update On 2023-03-03 10:55:00 IST
  • ஜெயங்கொண்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் துணைத் தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பதையும், ஆள் குறைப்பு நடவடிக்கையை கண்டித்தும், அரசாணை 139 மற்றும் 152ஐ மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் ராமநாதன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் ராஜா பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News