உள்ளூர் செய்திகள்

அரியலூரில் அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம்

Published On 2022-08-24 14:26 IST   |   Update On 2022-08-24 14:26:00 IST
  • அரியலூரில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டர் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில் தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ, முதலுதவிப் பெட்டி உள்ளிட்டவைகள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

அரியலூர்,

அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள தமிழ்நாடு அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டர் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கு.விமலா கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ, முதலுதவிப் பெட்டி உள்ளிட்டவைகள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கி, அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க அமைப்புச்சாரா ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலாளர் அப்பாஸ், பொருளாளர் கொளஞ்சியப்பன், இணைச் செயலாளர் ராஜ்குமார், செய்தித் தொடர்பாளர் அப்துல்ரஹீப், அமைப்புச்சார ஓட்டுநர் அணியைச் சேர்ந்த க.பாபு, மாவட்ட ஆலோசகர் சகானா, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News