உள்ளூர் செய்திகள்

வலம்புரி ஆண்டவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Published On 2022-10-10 14:30 IST   |   Update On 2022-10-10 14:30:00 IST
  • வலம்புரி ஆண்டவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடு போயிள்ளது
  • தொடர் திருட்டினால் பொதுமக்கள் அச்சம்

அரியலூர்

செந்துறை அருகே உள்ள மிருகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வலம்புரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து தூக்கி சென்றனர். பின்னர் அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். இதே போன்று கடந்த சில நாட்களாக பரணம், பிலா குறிச்சி, வீரா கண் ஆகிய கிராமங்களில் தொடர்ந்து பலரது விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் மற்றும் வயர்களை வெட்டி திருடி சென்று விட்டனர். இந்தத் தொடர் திருட்டு காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஆகவே மேற்கண்ட கிராமங்களில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பக்தர்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News