உள்ளூர் செய்திகள்
அரசு வழங்கிய இடத்தில் நூலகம் கட்ட கோரிக்கை
- அரசு வழங்கிய இடத்தில் நூலகம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- விருந்தினர் இல்லத்தை இசைப்பள்ளியாக மாற்றித்தர வேண்டும்.
அரியலூர்
தமிழ்நாடு கலை இலக்கிய மாவட்ட அமைப்பின் ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் பேராசிரியர் சிவபெருமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புலவர் அரங்கநாடன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கங்கை கொண்ட சோழபுரத்தில் தமிழக அரசால் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள விருந்தினர் இல்லத்தை கலை மற்றும் இசைப்பள்ளியாக மாற்றித்தர வேண்டும். ஜெயங்கொண்டத்தில் அரசு வழங்கிய இடத்தில் நூலகத்தை கட்டித்தர வேண்டும். ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் உள்ள நூலகத்திற்கு கவிஞர் மருதகாசியின் பெயர் சூட்ட வேண்டும். அவரது பிறந்த நாளை தா.பழூரில் சிறப்பாக கொண்டாட வேண்டும். தா.பழூரில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.