உள்ளூர் செய்திகள்

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

Published On 2023-03-02 06:21 GMT   |   Update On 2023-03-02 06:31 GMT
  • பா.ம.க.வினர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மனு
  • நடவடிக்கை இல்லையென்றால் முற்றுகை போராட்டம் அறிவிப்பு

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கூவாகம் செல்லும் சாலையில் உள்ள திடீர்குப்பம் கிராமத்தில் அரசு மதுபான கடை திறப்பதற்கு டாஸ்மார்க் ஊழியர்கள் இடம் தேர்வு செய்து கடை திறப்பதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் துரை, ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட அரசு அதிகாரியிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் முன்னிலையில், ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் தலைமையில், சந்திரகாசன், வழக்கறிஞர் கதிரவன், ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் வாரியங்காவல், குவாகம், திடீர் குப்பம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். மேலும் இப்பகுதியில் கடை திறந்தால் ஏராளமான விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், இரண்டு தனியார் பள்ளிகள் உள்ளதாகவும், இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிககளுக்கு பாதிப்பு மற்றும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதை சுற்றிலும் முந்திரி கார்டு உள்ளதால் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அந்த பகுதியில் கடை திறக்கக் கூடாது என தெரிவிக்கின்றனர். மேலும் கடை திறப்பது உறுதி செய்தால் முற்றுகைப் போராட்டம் சாலை மறியலிலும் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News