உள்ளூர் செய்திகள்
- அனுமதியின்றி கிராவல் எடுத்துச் சென்ற 3 லாரிகள் சிறைபிடிப்பு
- 3 டிரைவர்கள் கைது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே திருக்களப்பூர் நடுத்தெருவில் அனுமதி இன்றி கிராவல் மண் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் 3 டிப்பர் லாரிகளை சிறை பிடித்துள்ளனர். இது குறித்து தாசில்தார் மற்றும் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து லாரி டிரைவர்களான ஆண்டிமடம் ஐயூர் வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது28), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி மோகூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (22), மேலணிக்குடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரவணன் (33) ஆகியோரை ஆண்டிமடம் புவிவட்ட ஆய்வாளர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.