உள்ளூர் செய்திகள்

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

Published On 2023-03-06 09:10 IST   |   Update On 2023-03-06 09:10:00 IST
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம்
  • அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது

அரியலூர்,

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினேயே அமல்படுத்த வேண்டும். ஊக்க ஊதியவுயர்வு வழங்கப்படுவதோடு காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினையும் உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அருேக ஜேக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வேல்முருகன்தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் மா.நம்பிராஜ், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச் சங்க மாநிலத் தலைவர் கோ.பாக்கியராஜ் , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.பஞ்சாபிகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கே.சேஷக்தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News