உள்ளூர் செய்திகள்

தாத்தாவை தாக்கிய பேரன்கள்

Published On 2023-03-08 11:05 IST   |   Update On 2023-03-08 11:05:00 IST
  • சொத்து பிரிப்பதில் முன்விரோதம் காரணமாக தகராறு
  • 2 பேரன்கள் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால்(வயது85). இவருக்கு 4 மகன்கள் உள்ள நிலையில் மூன்றாவது மகனான கந்தசாமி மகன் சுரேஷ்(27), நான்காவது மகனான சேட்டு மகன் மணிகண்டன்(32) ஆகிய 2பேர பிள்ளைகளும் சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை இடையார் புளியந்தோப்பு பகுதியில் இருந்த ராஜகோபாலை பேரப் பிளைகளான சுரேஷ், மணிகண்டன் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News