உள்ளூர் செய்திகள்

லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது

Published On 2023-03-25 13:17 IST   |   Update On 2023-03-25 13:17:00 IST
  • சாலை பணிக்கு கமிஷன் கேட்டவர் கைது
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்

அரியலூர்,

அரியலூர்  ஊரக வளர்ச்சி துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் ஜெயங்கொண்டம் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் சாலை பணி களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இதில் ஒப்பந்த தொகையில் 2 சதவீதம் கமிசன் கேட்டுள்ளார். இதனை பெறுவதற்கு ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு சென்றுள்ளார். அப்போது ரசாயனம் பூசப்பட்ட பணத்தை ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலி சார் கையும் களவுமாக கைது செய்தனர்.இது குறித்து கங்கைகொண்ட சோழபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வஹிதாபானுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News