உள்ளூர் செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2023-03-28 06:17 GMT
  • ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்றது
  • கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

அரியலூர்,

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆமணக்கந்தோண்டி மற்றும் புதுச்சாவடி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட குழு உறுப்பினர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவநேசன், மைதீன் ஷா, உதயதுல்லா, கணேசன், தனவேல், மாவட்ட செயற்குழு பாலசுப்ரமணியன், இந்திராணி, சர்மிளா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு மணிவேல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.இதில் புதுச்சாவடியில் பட்டா மாற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதுச்சாவடியில் இயங்கி வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அதை இடித்து புதிய கட்டிடம் அமைக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை பயன்பாட்டை முறையற்ற முறையில் விவசாய நிலத்துக்கு பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கையும், ஆமணக்கந்தோண்டி ஊராட்சியில் உள்ள முதியோர் மாற்றுத்திறனாளி விதவை ஆகியோர்களுக்கு அரசு உதவி தொகை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇதில் மாவட்ட குழு பத்மாவதி, ஒன்றிய குழு தோழர் ரவீந்திரன், பூபாலன், பசுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News