உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜா பெரியசாமி தலைமை தாங்கினார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் கடந்த 6 மாத காலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை அவதூறாக பேசுகிறார். அவர் காரல் மார்க்ஸ் பற்றி பேசியது மிகவும் கடுமையான கண்டனத்துக்குரியது என கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜா பெரியசாமி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமநாதன், நகரச் செயலாளர் இறைக்கோ உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.