ஜெயங்கொண்டத்தில் எம்.ஜி.ஆரின் நினைவுதினம் அனுசரிப்பு
- எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது
- இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மாவட்ட துணைச் செயலாளருமான ராமஜெயலிங்கம் தலைமையில் திருச்சி சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக அண்ணா சிலையில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தி.க.கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமையில் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய தலைவர் கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய அமைப்பாளர் தமிழ் சேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் சின்னராஜா, சுந்தர் மற்றும் இளையபாரதி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.