உள்ளூர் செய்திகள்
அரியலூரில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
- அரியலூரில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத்தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக் கொள்ள சேனல் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கேபிள் கட்டணம் உயரவுள்ளது. எனவே, கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.