உள்ளூர் செய்திகள்

வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

Published On 2023-03-08 10:57 IST   |   Update On 2023-03-08 10:57:00 IST
  • வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்
  • பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்று கலந்துரையாடல்

அரியலூர்,

வி.கைகாட்டி அருகே ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு, விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் இணைந்து வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வடமாநில தொழிலாளர்கள், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், யாரும் சொந்த மாநிலத்திற்கு செல்லவில்லை என்றும், தங்கள் குழந்தைகள் விளாங்குடி அரசு பள்ளியில் படித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளின் விழிப்புணர்வு வீடியோ அவர்களிடம் காண்பிக்கப்பட்டு, வாட்ஸ்-அப்பில் அனுப்பப்பட்டது. அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக போலீசாரை அணுகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது

Tags:    

Similar News