உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தையுடன் காதலரை கரம் பிடித்த பட்டதாரி பெண்

Published On 2023-01-13 06:16 GMT   |   Update On 2023-01-13 06:16 GMT
  • ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தையுடன் காதலரை பட்டதாரி பெண் கரம் பிடித்தார்
  • நர்மதாவை சந்துரு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து மீன்சுருட்டி அருகே உள்ள குட்டைக்கரை காலனி தெருவை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் சந்துரு (வயது24). டிப்ளமோ படித்த இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வில்வகுளம் ரெட்டித்தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் பட்டதாரியான நர்மதா(21) என்பவரை கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து காதலரிடம் தன்னை திருமணம் செய்ய கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் நர்மதா அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தது தெரிய வந்தது. பின்னர் இருதரப்பு பெற்றோரிடம் கூறி கோயிலில் வைத்து திருமணம் செய்து மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டுமென அனுப்பி வைத்தனர். இதையடுத்து நர்மதாவை சந்துரு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார். இதையடுத்து போலீசார் இருவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி காதல் கணவர் சந்துருவுடன் நர்மதாவை அனுப்பி வைத்தனர்.


Tags:    

Similar News