- கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது நடவடிக்கை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் அரங்கனேரியில் சந்தேகப்படியான மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது அவர்கள் கல்லாத்தூர் வடவீக்கம் மெயின் ரோட்டுத் தெருவை சார்ந்த மாயகிருஷ்ணன் மகன் விமல்ராஜ் (வயது28), ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்த சின்னசாமி மகன் சிவச்சந்திரன் (27), ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெரு பஜருல்லா மகன் முகமதுயாசிக் (19) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா கையில் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.