உள்ளூர் செய்திகள்

தண்ணீர் கேனில் சாரயம் கடத்திய 2 பேர் கைது

Published On 2022-10-08 14:39 IST   |   Update On 2022-10-08 14:39:00 IST
  • தண்ணீர் கேனில் சாரயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
  • இரு சக்கர வாகனத்தில் வந்த போது பிடிபட்டனர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் எரி சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் பெபின் செல்வ பிரிட்டோ மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், நிக்கோலஸ் ஆகியோர் கோடாலி, இடங்கண்ணி ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சீனிவாசபுரம் புது தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சரவணன்(வயது47), இலையூர் கீழத் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் வீரமணி( 25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த 20 லிட்டர் தண்ணீர் கேனில் சாராயம் இருப்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து வழக்கு பதிந்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News