விழுப்புரம் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் தகவல்
- கல்பனாசாவ்லா விருது வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட வுள்ளது.
- சுதந்திர தினத்தன்று வழங்கப்படும். சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படவுள்ளது.
விழுப்புரம்:
2023 - ஆம் ஆண்டிற்கான கல்பனாசாவ்லா விருது வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட வுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பலசெயல்களை செய்திருக்கவேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்படும். சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படவுள்ளது.
முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை என்ற முகவரிக்கு தபால் மூலமாக வருகிற 28-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இணையதள த்தில் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட விருது தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்கள்.