ஓசூரில் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி முகாம்
- மனிதக்கடத்தல் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வினா விடை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
- அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஆராதனா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி முகாமினை நடத்தின.
ஓசூர் ரயில்நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த முகாமிற்கு ஓசூர் சப்-கலெக்டர் தேன்மொழி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தார்.
மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட சமூக நல குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிவகாமி, வக்கீல் சந்திரா, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், சைல்ட் லைன் பிரசன்னகுமாரி , 181 மைய நிர்வாகி சர்வகலா, மற்றும் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களும்,மனித கடத்தல் குறித்தும், எவ்வித செயல்களெல்லாம் மனித கடத்தல் என்பது பற்றியும் தெளிவாகவும், விளக்கமாகவும் பேசினர். மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மனிதக்கடல் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வினா விடை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், கல்லூரி, ஐ.டி.ஐ. மாணவ, மாணவியர், தனியார் பாரா மெடிக்கல் மாணவியர், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில், ஆராதனா அறக்கட்டளை நிறுவனர் ராதா நன்றி கூறினார்.