கொங்கணாபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் சாவு
- சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்ப வருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.
- அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகள் மற்றும் சரவெடிகள், வாண வெடிகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு வந்தது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வெள்ளாளபுரம் ஊராட்சி, முனியம் பட்டியைஅடுத்த சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்ப வருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.
அரசு அனுமதியுடன் செயல்பட்டு வந்த இந்த ஆலையில், விழா காலங்களில் பயன்படுத்துவ தற்கான அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகள் மற்றும் சரவெடிகள், வாண வெடிகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த
22-ந் தேதி மாலை இந்த ஆலையில் இருந்த பட்டாசுகள் மற்றும் வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த சன்னியாசிக் கடை பகுதியை சேர்ந்த அமுதா (45) என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலத்த தீக்காயங்க ளுடன் மீட்கப்பட்ட, வெள்ளாள புரம் வாண கார தெருவை சேர்ந்த வேடப்பன் (75) என்பவர், சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த வேடப்பன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.
போதிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, விபத்து ஏற்படும் வகையில் அஜாக்கி ரதையாக செயல்பட்டதாக, சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் குமார் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.