உள்ளூர் செய்திகள்
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெற்ற காட்சி.
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் பிற துறைகளை இணைத்து செயல்படுத்துவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
- கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றியம் பெரும்பத்து ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் பிற துறைகளை இணைத்து செயல்படுத்துவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் முன்னிலை வகித்தார்.வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன் ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணுவர்தன், நிதி சார் கல்வி ஆலோசகர் இளங்கோ, கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.