ஆனைவாரி நீர் வீழ்ச்சி இன்று முதல் மீண்டும் திறப்பு சுற்றுலா பயணிகள்குவிந்தனர்
- கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி, ஆனைவாரி நீர் வீழ்ச்சி உள்ளது.
- வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் இந்த நீர் வீழ்ச்சி செயல்படுகிறது.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி, ஆனைவாரி நீர் வீழ்ச்சி உள்ளது. வனத்து றையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் இந்த நீர் வீழ்ச்சி செயல்படுகிறது.
வெள்ளப்பெருக்கால் மூடல்
கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கல்வராயன் மலை பகுதியில் பெய்த கன மழையால் ஆனைவாரி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 31-ந் தேதி அதிக அளவில் தண்ணீர் வந்ததால் சுற்றுலா மையத்தை வனத்துறையினர் மூடினர். இந்த நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததால் இன்று முதல் ஆணை வாரி நீர் வீழ்ச்சி , முட்டல் ஏரி சுற்றுலா மையம் திறக்கப்படும் அதிகாரிகள் அறிவித்தனர் . அதன் படி இன்று காலை முதல் ஆணைவாரி நீர் வீழ்ச்சி முட்டல் ஏரி சுற்றுலாமையம் திறக்கப்பட்டது. பல நாட்களுக்கு பிறகு நீர் வீழ்ச்சி திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே அதிக அளவில் குவிந்தனர்.