உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

குத்தாலத்தில், தமிழை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-02-26 14:20 IST   |   Update On 2023-02-26 14:20:00 IST
  • விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
  • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குத்தாலம்:

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழை தேடி" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே குத்தாலம் கடைவீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்துக்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். திமுக முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி.கல்யாணம், தமிழ் அறிஞர்கள் முத்துசானகிராமன், விழிகள் சி.ராஜ்குமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியதாவது:-

தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமை ப்படக்கூடிய ஒன்று அல்ல. அது நமக்கு தலைகுனிவு என்றார்.

நமது அடையாளம் மற்றும் அன்னை தமிழை நாம் இழந்து விட்டோம் என்று அவர் பேசினார்.இக்கூட்டத்தில், பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, இளைஞரணி துணைத் தலைவர் விமல், மூத்த நிர்வாகிகள் குத்தாலம் கணேசன், தங்கஅய்யாசாமி, வக்கீல் சுரேஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News