உள்ளூர் செய்திகள்

புதரில் வீசப்பட்ட குழந்தையின் உடல்.

புவனகிரி அரசு பள்ளி வளாக புதரில் பிணமாக கிடந்த 8 மாத ஆண் குழந்தை

Published On 2022-09-02 11:36 IST   |   Update On 2022-09-02 11:36:00 IST
  • புவனகிரி அரசு பள்ளி வளாக புதரில் 8 மாத ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.
  • இந்த தகவல் பள்ளி வளாகத்தில் காட்டுத் தீப்போல பரவியது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரியில் குறிஞ்சிப்பாடி-புவனகிரி சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அருகில் உள்ள கிராம ங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று வழக்கம்போல் மாணவிகள் பள்ளி வளா கத்தில் உள்ள கழி வறைக்கு சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதரில் 8 மாத ஆண் குழந்தை கிடப்பதை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பள்ளி வளாகத்தில் காட்டுத்தீப்போல பரவியது. இது பற்றி பள்ளி மாணவிகள், ஆசிரியைகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இது தொடர்பாக புவனகிரி போலீஸில் புகார் செய்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் தலை மையில் போலீசார் அங்கு விரைந்தனர். பிணமாக கிடந்த ஆண் குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தகுழந்தைைய முட்புதருக்குள் வீசி சென்றது யார்? தவறான வழியில் குழந்தை பிறந்த தால் அதனை கொன்று பெண் வீசி சென்றாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நட த்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News