உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆகாஷ் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.


தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு-கலெக்டர் ஆகாஷ் தகவல்

Published On 2022-12-29 07:00 GMT   |   Update On 2022-12-29 07:00 GMT
  • முகாமில் ரூ. 87 ஆயிரத்து 515 மதிப்பில் நலத்திட்டங்களை கலெக்டர் ஆகாஷ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
  • 50 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கூறினார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் ஆகாஷ் பங்கேற்றார்.

அதில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை உள்பட ரூ. 87 ஆயிரத்து 515 மதிப்பில் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியக்கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தொழில் முனைவோர் அனைவரும் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகளை பெற்று பயனடையலாம். மேலும், நமது மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 பள்ளிகளை தேர்வு செய்து கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் 1800 599 3599 மற்றும் வாட்ஸ் அப் எண் 7190079008 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்

முகாமில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திவ்யா மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அமுதா தேன்ராஜ் (கடங்கனேரி), மாலதி (தெற்கு காவலாக்குறிச்சி), தனித்துணை கலெக்டர் ஷீலா, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தமிழ்மலர், ஆலங்குளம் தாசில்தார் ரவீந்திரன், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News