கைது செய்யப்பட்ட வீரமணி, பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மதுபாட்டில்கள்.
காரில் மதுபாட்டில்- சாராயம் கடத்தியவர் கைது
- சோதனையில் 336 மது பாட்டில்கள் மற்றும் 550 லிட்டர் பாண்டி சாராயம் இருந்தது.
- காரைக்காலில் இருந்து சீர்காழி பழையார் மீனவ கிராமத்திற்கு சாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தலைமை காவலர்கள் அன்பரசன், பாலமுருகன், மற்றும் போலீசார் பாகசாலை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த இண்டிகோ காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 7 அட்டை பெட்டிகளில் 336 மது பாட்டில்கள் மற்றும் 550 லிட்டர் பாண்டி சாராயம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மதுவிலக்கு போலீசார் காரையும் கடத்தப்பட்ட சாராயம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
காரை ஓட்டி வந்த சீர்காழி தாலுக்கா வழுதலைக்குடி கீழத் தெருவை சேர்ந்த வீரமணி என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் காரைக்காலில் இருந்து சீர்காழி பழையார் மீனவ கிராமத்திற்கு சாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு வீரமணியை கைது செய்தனர்.