உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-24 10:51 GMT   |   Update On 2023-01-24 10:51 GMT
  • மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • ரூ.21 ஆயிரம் மாத ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. கவுன்சில் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தங்கவேலு ஆகியோர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வருவாய் இழப்பு, விலைவாசி உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே மத்திய அரசு மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும். 3 வருடங்களாக மூடப்பட்டிருக்கும் என்.டி.சி ஆலைகளை உடனே திறக்க வேண்டும். ரூ.21 ஆயிரம் குறையாத மாத ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

Similar News