உள்ளூர் செய்திகள்
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு- பொன்னேரியில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது
- அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- கைதான அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பொன்னேரி:
ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதனை ரத்து செய்யக்கோரியும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பொன்னேரியில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைதான அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.