உள்ளூர் செய்திகள்
செஞ்சியில் துணிகரம்: ஜவுளி கடை அதிபரை மிரட்டி பணம் பறிப்பு
- தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார்.
- ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
விழுப்புரம்:
செஞ்சி கிருஷ்ணாபுரம் வ.உ. சி. தெருவை சேர்ந்த வர் சையத் ஜின்னா. அவரது மகன் சையத் இத்ரிஸ் (வயது 35). இவர் மேல்மலையனூ ரில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார். அவர் செஞ்சி மேய்கலவாய்_ சந்தை தோப்பு சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளியின் அருகே அடையாளம் தெரியாத 3 பேர் வழிமடக்கி மிரட்டல் விடுத்து அவர் வைத்தி ருந்த ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சையத் இத்ரிஸ் செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். எப்போதும் போக்குவரத்து இருக்கும் பகுதியில் வாலி பரை வழிமடக்கி பணம் பறித்த சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.