உள்ளூர் செய்திகள்
- சேலம் கன்னங்குறிச்சி பிறந்தநாள் கோவில் தெருவை சேர்ந்த வாலிபர் மாயமானார்.
- இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து சென்ற கிருபாகரன் வீடு திரும்பவில்லை.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி பிறந்தநாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி அமிர்தம். இவரது மகன் கிருபாகரன் (வயது 35). இவர், பிளஸ்- 2 வரை படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்றார். ஒரு விபத்தில் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து சென்ற கிருபாகரன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனை தேடி வருகின்றனர்.