உள்ளூர் செய்திகள்

கோவையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-15 09:35 GMT   |   Update On 2023-03-15 09:35 GMT
  • எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு போட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

கோவை,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் இன்று அ.தி.மு.க. ஒருங்கிைணந்த கோவை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வக்கீல் பிரிவு செயலாளர் இன்ப துரை கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்தும், எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டதை கண் டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுசாமி, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி , தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News