உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ஆண்டிபட்டியில் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-05-06 11:24 IST   |   Update On 2023-05-06 11:24:00 IST
19 பேர் கொண்ட பூத் கமிட்டியில் கட்சி சார்பில் 7 பேர், மகளிர் குழு 5 பேர், இளைஞர் இளம் பெண்கள் பாசறை 5 பேர், தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து 2 பேரை உறுப்பினர்களாக சேர்க்கஅறிவுறுத்தப்பட்டது.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டியில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகி ராஜன் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஜக்கையன் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக பேசினார்.

19 பேர் கொண்ட பூத் கமிட்டியில் கட்சி சார்பில் 7 பேர், மகளிர் குழு சார்பில் 5 பேர், இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் 5 பேர், தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து 2 பேரை உறுப்பினர்களாக சேர்க்கஅறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், ஒன்றிய அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி கவிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News