உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை

Published On 2023-05-10 08:44 GMT   |   Update On 2023-05-10 08:44 GMT
  • திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை தொடங்கியது.
  • இதற்கான விண்ணப்பம் கல்லூரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை தொடங்கியது.

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களால் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 36 ஆண்டுகளாக ஒழுக்கம் நிறைந்த தரமான கல்வியை வழங்கி வருகிறது. இக்கல்லூரி பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு 2(f) பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அனுபவம் மிக்க மற்றும் தகுதி வாய்ந்த பேராசிரியைகளால் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரி மாணவிகள் இதுவரை பல்கலைக்கழக அளவில் 1386 ரேங்க் பெற்று சாதனை படைத்து உள்ளனர். குறிப்பாக 89 மாணவிகள் முதல் ரேங்க் பெற்று பல்கலைக்கழகம் வழங்கும் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளனர்.

மேலும், கல்லூரியில் சிறந்த நூலக வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தடையில்லா மின்சார வசதி, பாதுகாப்பான விடுதி வசதி மற்றும் பஸ் வசதிகளையும் கொண்டு பல்கலைக்கழக அளவில் சிறந்த மகளிர் கல்லூரியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள்

இந்த கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளாக பி.ஏ. (தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம்), இளம் அறிவியல் பாடப்பிரிவுகளாக பி.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல்) பி.சி.ஏ. (கணினி பயன்பாட்டியல்), இளம் வணிகவியல் பி.காம் (2 பிரிவு), பி.பி.ஏ. என 11 இளநிலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. முதுநிலை பாடப்பிரிவுகளாக எம்.ஏ. (தமிழ், ஆங்கிலம்), எம்.எஸ்சி. (கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்), எம்.காம் என 6 பிரிவுகளும் ஆராய்ச்சி படிப்பாக பி.எச்டி. கணிதமும் உள்ளன.

மாணவிகள் சேர்க்கை

இந்த கல்லூரியின் 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவிகள் சேர்க்கை நேற்று முன்தினம் முதல் தொடங்கி உள்ளது. இதற்கான விண்ணப்பம் கல்லூரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. www.gacw.in என்ற கல்லூரி இணையதளத்திற்குள் சென்று APPLY NOW வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் மாணவிகளின் புகைப்படம், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை ஸ்கேன் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். கல்லூரி இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

தொலைபேசி எண்கள்

விண்ணப்பம் தொடர்பாக மேலும் விவரங்களை பெற 04639- 242184, 220525, 220529, 220533 ஆகிய கல்லூரி தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News