உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

Published On 2023-05-21 08:21 GMT   |   Update On 2023-05-21 08:21 GMT
  • பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
  • இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சேலம்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரி யர்கள், இடைநிலை, பட்ட தாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கியது. இதில் உபரி பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடை பெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலும் வெளி யிடப்பட்டது.இதனிடையே நடப்பாண்டில் போதுமான பாடவேளை இல்லாத முதுகலை ஆசிரியர்களை 10 மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிப்ப துடன், அதன் அடிப்படை யில் பட்டதாரி ஆசிரி யர்களை உபரியாக கணக்கிட்டு பட்டியல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பட்ட தாரி ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழக மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், தலைவர் பாஸ்கரன், பொரு ளாளர் மலர் கண்ணன் மற்றும் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், செயலா ளருக்கும் கோரிக்கை மனு அனுப்பினர். அதில், முதுகலை ஆசிரியர்களை கீழ் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிக்க கூடாது, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைபடியே பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியு றுத்தினார்.இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழகம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரி வித்துள்ளது.

Tags:    

Similar News