மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி
- 30-வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 18-ந்தேதி பூச்சாட்டு தல் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது.
- நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 30-வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 18-ந்தேதி பூச்சாட்டு தல் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது.
அதனை முன்னிட்டு தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று காலை குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காலை 8.30 மணி அளவில் வன பத்ரகாளியம்மனுக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகளும் நடத்தப்பட்டன. அப்போது பல வண்ண மலர்களால் அலங்கரிங்கப்பட்ட குண்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பரம்பரை அறங்காவலர் வசந்தா மேள, தாளங்கள் முழங்க மண்வெட்டியால் குண்டம் கண் திறந்து வைத்தார். அதன்பிறகு கோவில் பணியாளர்கள் பூஜை மற்றும் சடங்குகளை நடத்தினார்கள்.