உள்ளூர் செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் உடன்குடி பகுதி தி.மு.க.வினர் கோரிக்கை மனு கொடுத்த போது எடுத்தபடம்.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் உடன்குடி பகுதி தி.மு.க.வினர் கோரிக்கை மனு கொடுத்த போது எடுத்தபடம்.

உடன்குடி வட்டார பகுதியில் 15 நீர் பிடிப்பு குளங்களையும் முழுமையாக நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

Published On 2022-09-09 13:39 IST   |   Update On 2022-09-09 13:39:00 IST
  • தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் அணை யின் தென்கால்உபரிநீர் முழுவதையும் குலசை தருவைக்குளம் வழியாகமணப்பாடு கடலுக்குமட்டும் அனுப்ப வேண்டும்
  • 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் தங்கி இருந்த தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை உடன்குடி பகுதியில் உள்ள தி.மு.கவினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-

தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் அணை யின் தென்கால்உபரிநீர் முழுவதையும் குலசை தருவைக்குளம் வழியாகமணப்பாடு கடலுக்குமட்டும் அனுப்ப வேண்டும் என்றும்,

வருடந்தோறும் ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலுக்கு நேரடியாக செல்லும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் அளவை முன்கூட்டியே கணக்கிட்டு, அதை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்பே உள்ள மருதூர்மேலக்கால் அணைக்கட்டு மூலம் உபரிநீரை தெற்கே திருப்பி விட்டு உடன்குடியைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு குளங்களான செம்மறிபடுகைகுளம், சடையனேரிகுளம், தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்து வடக்குகுளம், மானாட்சிகுளம், குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம். தேரிகுண்டாங்கரை உட்பட 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் எஞ்சிய தண்ணீரை தாங்கைக்குளம் வழியாக கருமேனிஆற்றில்விட்டு மணப்பாடு கடலுக்கு அனுப்பினால் போதும்.

மணப்பாடுகடல்முகம் இயற்கையாக அமைந்து இருப்பதால் உடன்குடி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் புன்னக்காயல் கடலுக்கு நேர்வழியில் போவதை மாற்றிட முடியும்.

மேலும் உடன்குடியை சுற்றி மணப்பாடு கடலுக்கு அனுப்பினாலே உடன்குடி வட்டாரபகுதியில் உள்ள நிலத்தின்நீர் வளத்தை பாதுகாக்க முடியும், உடன்குடியில் பாசன குளங்கள் எதுவுமில்லை.

அனைத்துமே நீர்ப்பிடிப்பு குளங்கள் தான்.பம்புசெட் மூலமே விவசாயம் நடைபெறுவதால் அவைஉறிஞ்சும் தண்ணீரை மேற்கண்ட குளங்கள் மூலமாக வருடந்தோறும் கொடுத்தாலே போதும், 15 நீர் பிடிப்பு குளங்களையும் காப்பாற்றி கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை திருப்பி விட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் தமிழகஅரசின்சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் இளங்கோ, கூட்டுறவு வங்கி தலைவர் அசாப்அலி பாதுஷா, தண்டுபத்து பாலகணேசன், சேக் முகமது, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News